பள்ளிக்கு உரிய நேரத்தில் குழந்தைகள் சென்று திரும்புவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்


பள்ளிக்கு உரிய நேரத்தில் குழந்தைகள் சென்று திரும்புவதை   பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்
x

பள்ளிக்கு உரிய நேரத்தில் குழந்தைகள் சென்று திரும்புவதை பெற்றோர் உறுதி செய்ய வேண்டும்

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

பள்ளிக்கு உரிய நேரத்தில் குழந்தைகள் சென்று திரும்புவதை பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும் என்று தஞ்சைமாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

பள்ளிகள் திறப்பு

தஞ்சை மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரி சிவக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அனைத்து பள்ளிகளும் வருகிற 13-ந்தேதி திறக்கும் நிலையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை நாள்தோறும் பள்ளிக்கு அனுப்ப வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் உரிய நேரத்தில் பள்ளிக்கு செல்வதையும், பள்ளியிலிருந்து வீடு திரும்புவதையும் உறுதி செய்தல் வேண்டும். மாணவர்கள் முறையான சீருடை அணிந்து செல்வதையும், முறையான சிகை அலங்காரத்துடன் செல்வதையும் உறுதி செய்தல் வேண்டும்.

மாணவர்கள் பள்ளிக்கு விடுப்பு எடுக்கும் போது வகுப்பாசிரியருக்கு முறையாக தகவல் தெரிவித்தல் வேண்டும். ஒவ்வொரு மாதமும் பள்ளியில் நடக்கும் பெற்றோர் ஆசிரியர் சந்திப்பில் கலந்து கொண்டு மாணவர்களின் கல்விநிலைக் குறித்து கலந்து ஆலோசித்தல் வேண்டும். பள்ளியில் வழங்கப்படும் வீட்டுப் பாடங்கள் மாணவர்கள் வீட்டில் முடிப்பதை பெற்றோர்கள் கண்காணித்தல் வேண்டும்.

பாலமாக செயல்பட வேண்டும்

பெற்றோர்கள், தங்கள் வேலைப்பளுவிற்கிடையே தங்கள் குழந்தைகளின் கல்வி நிலையில் கவனம் செலுத்துதல் வேண்டும். ஆசிரியர் மாணவர் உறவுக்கு பெற்றோர்கள் பாலமாக செயல்பட வேண்டும். பள்ளிகள் மூலம் வழங்கப்படும் உதவி தொகையினை விடுபடாமல் பெற அருகில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் மாணவர் பெயரில் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் விவரத்தை தலைமையாசிரியரிடம் தெரிவித்தல் வேண்டும்.

மாணவர்கள் பள்ளிப்படிப்பு மட்டுமின்றி விளையாட்டு, பேச்சுத்திறன், எழுதும்திறன் போன்ற திறன்களை வளர்க்கும் களமாக பள்ளிகள் தற்போது செயல்பட்டு வருகிறது. பாடபுத்தகங்கள் மட்டுமின்றி நூல்கள் வாசிக்கும் பழக்கத்தினை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளியில் உள்ள நூலகங்கள் மற்றும் தங்கள் பகுதியில் உள்ள நூலகங்களை மாணவர்கள் பயன்படுத்த வேண்டும்.

தஞ்சை மாவட்ட கலெக்டரின் வீட்டுக்கு ஒரு விருட்சம் என்ற திட்டத்தில் விருப்பமுள்ள மாணவர்களை இணைத்து பள்ளியில் இருந்து மரக்கன்றுகளை பெற்று மாணவர்கள் வீட்டில் நட்டு முறையாக பராமரித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story