இருளர் இன மக்களை தனது அறைக்கு அழைத்து குறைகளை கேட்ட கலெக்டர்


இருளர் இன மக்களை தனது அறைக்கு அழைத்து குறைகளை கேட்ட கலெக்டர்
x

இருளர் இன மக்களை தனது அறைக்கு அழைத்து கலெக்டர் குறைகளை கேட்டறிந்தார்.

அரியலூர்

அரியலூரில் நடந்த மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் மணப்பத்தூர் ஊராட்சி நத்தக்குழி கிராமத்தை சேர்ந்த இருளர் இன மக்கள் வீட்டுமனை பட்டா கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர். அதில், சுமார் 20 குடும்பத்தினர் நத்தக்குழி லட்சுமி நாராயணசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் 10 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருகிறோம். தாங்கள் குடியிருக்கும் பகுதிக்கு அருகில் அரசுக்கு சொந்தமான 2 ஏக்கர் புறம்போக்கு இடம் உள்ளது. அந்த இடத்தில் பழங்குடி இருளர் சமுதாய மக்களுக்கு மனைப்பட்டா வழங்க வேண்டும், என்று கூறியிருந்தனர். அவர்களது மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர், பின்னர் கூட்டம் முடிந்தவுடன் அவர்களை தனது அறைக்கு அழைத்து அவர்களது குறைகளை கேட்டறிந்தார். அப்போது, உரிய நடவடிக்கை எடுப்பதாக இருளர் இன மக்களிடம் தெரிவித்தார். இருளர் இன மக்களை, கலெக்டர் தனது அறைக்கே அழைத்து குறைகளை கேட்டது, அவர்களை நெகிழ்ச்சியடைய செய்தது.


Next Story