ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்


ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் தேசிய கொடி ஏற்றினார்
x

75-வது சுதந்திர தினத்தையொட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அனிஷ்சேகர் தேசிய கொடி ஏற்றினார். அங்கு தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

மதுரை

75-வது சுதந்திர தினத்தையொட்டி மதுரை ஆயுதப்படை மைதானத்தில் கலெக்டர் அனிஷ்சேகர் தேசிய கொடி ஏற்றினார். அங்கு தியாகிகள் கவுரவிக்கப்பட்டனர்.

அணிவகுப்பு

மதுரை மாவட்ட நிர்வாகம் சார்பாக ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத் சிங் காலோன், கூடுதல் கலெக்டர் சரவணன், தென் மண்டல போலீஸ் ஐ.ஜி. அஸ்ரா கர்க், மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் ஆகியோர் கலந்து கொண்டனர். கலெக்டர் அனிஷ் சேகர் தலைமை தாங்கி தேசிய கொடி ஏற்றி வைத்தார்.

பின்னர் அவர் போலீசாரின் பல்வேறு படைப்பிரிவுகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்று கொண்டார். தொடர்ந்து சுதந்திர போராட்ட தியாகிகள் மற்றும் அவர்களது வாரிசுகள் கவுரவிக்கப்பட்டனர். அவர்களுக்கு கலெக்டர் அனிஷ் சேகர் பொன்னாடை போர்த்தி இனிப்புகள் வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

அதன்பின் 40 பயனாளிகளுக்கு ரூ.67 லட்சத்து 922 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. அதன்படி முன்னாள் படைவீரர் நலத்துறை சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.35 ஆயிரம், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.1,18,500-ம், வருவாய்துறையின் சார்பில் 5 பயனாளிகளுக்கு ரூ.1,13,780-ம், வேளாண்மைத்துறையின் சார்பில் 2 பேருக்கு ரூ.6 ஆயிரமும், வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.1,42,450-ம், தோட்டக்கலைத்துறையின் சார்பில் 4 பயனாளிகளுக்கு ரூ.2,52,600-ம், தொழிலாளர் நலத்துறையின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.42 ஆயிரம்.

250 பேருக்கு விருது

மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் சார்பில் 3 பேருக்கு ரூ.2 லட்சத்து 42 ஆயிரமும், மாவட்ட கூட்டுறவுச் சங்கங்கள் துறையின் சார்பில் 2 பேருக்கு ரு.2 லட்சமும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.9,742-ம், தாட்கோ சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.4,43,650-ம், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.13 லட்சமும், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 3 பயனாளிகளுக்கு ரூ.5 லட்சத்து 76 ஆயிரமும், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சமும், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் சார்பில் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சத்து 19 ஆயிரத்து 200-ம் வழங்கப்பட்டன.

மேலும் மதுரை மாவட்டத்தில் சிறப்பாக பணிபுரிந்த அரசு அலுவலர்கள் என 250 பேருக்கு விருதுகள் வழங்கப்பட்டன. அதில் மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலி தளபதி சிறப்பாக பணியாற்றியதற்காக விருது பெற்றார்.

விழாவில் பள்ளி மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட வருவாய் அலுவலர் சக்திவேல் உள்பட பல்வேறு துறை அரசு அலுவலர்கள், காவல் துறை அலுவலர்கள், மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story