திருப்பத்தூர் மாவட்டத்தில்2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்கலெக்டர் தொடங்கி வைத்தார்


திருப்பத்தூர் மாவட்டத்தில்2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டம்கலெக்டர் தொடங்கி வைத்தார்
x

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டத்தில் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை கலெக்டர் அமர்குஷ்வாஹா தொடங்கி வைத்தார்.

2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள்

தமிழகத்தில் வனப்பரப்பை அதிகப்படுத்தும் நோக்கில் முதற்கட்டமாக 2 கோடியே 80 லட்சம் மரக்கன்றுகள் நடும் பசுமை தமிழகம் இயக்க திட்டத்தை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வனத்துறையின் சார்பில் பள்ளி மாணவர்களுடன் தொடங்கி வைத்தார். அந்த திட்டத்தின்கீழ் திருப்பத்தூர் மாவட்டத்தில் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் 2 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணிகள் தொடக்க விழா கந்திலி ஊராட்சி ஒன்றியம் எலவம்பட்டி ஊராட்சியில் நடந்தது.

விழாவுக்கு கலெக்டர் அமர்குஷ்வாஹா தலைமை தாங்கி மர மகிலம், மலைவேம்பு, தேக்கு, பூவரசன் போன்ற 500 மரக்கன்றுகளை நட்டு வைத்தார். அப்போது அவர் பேசுகையில், ''மாவட்டம் முழுவதும் வனத்துறையின் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகளும், ஊரக வளர்ச்சி, வேளாண்மைத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் சார்பில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டு வருகிறது. பல்வேறு துறைசார்ந்த பணியாளர்கள், தன்னார்வலர்கள் மற்றும் பொது மக்கள் அனைவரும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் கீழ் நடப்படும் மரக்கன்றுகளை நன்கு பராமரித்து பயனடைய வேண்டும்'' என்றார்.

நிகழ்ச்சியில் வருவாய் கோட்டாட்சியர் லட்சுமி, வனத்துறை உதவி வனப்பாதுகாவலர் ராஜ்குமார், வேளாண்மை துணை இயக்குநர்.பச்சையப்பன், தாசில்தார் சிவப்பிரகாசம், வனச்சரக அலுவலர் பிரபு, கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி, துணைத் தலைவர் மோகன்குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரை, பிரபாவதி, ஊராட்சி மன்ற தலைவர் மேனகா விவேகானந்தன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

1000 மரக்கன்றுகள்

இதேபோல் திருப்பத்தூர் உதவும் உள்ளங்கள் அமைப்பு சார்பாக நகர் முழுவதும் 1000 மரக்கன்றுகள் நடும் பணி தொடங்கப்பட்டது. உதவும் உள்ளங்கள் அமைப்பின் தலைவர் ரமேஷ் மரக்கன்றுகளை நட்டு வைத்தார். மேலும் மாவட்டம் முழுவதும் பசுமை தமிழ்நாடு இயக்கத்தின் சார்பில் 200 இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டன.


Next Story