அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் சந்தித்து 'நீட்' தேர்வில் வெற்றி பெற வாழ்த்து


அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் சந்தித்து நீட் தேர்வில் வெற்றி பெற வாழ்த்து
x

அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் சந்தித்து நீட் தேர்வில் வெற்றி பெற வாழ்த்தினார்.

ராணிப்பேட்டை

ஆற்காடு

அரசு மாதிரி பள்ளி மாணவ, மாணவிகளுடன் கலெக்டர் சந்தித்து நீட் தேர்வில் வெற்றி பெற வாழ்த்தினார்.

ஆற்காட்டை அடுத்த சக்கரமல்லூர் ஊராட்சியில் இயங்கும் அரசு மாதிரி பள்ளியில் நீட் தேர்வுக்காக மாணவ, மாணவிகள் தயார்படுத்தி வருகின்றனர். நாளை (ஞாயிற்றுக்கிழமை) நீட் தேர்வு நடைபெறும் நிலையில் கலெக்டர் ச.வளர்மதி நேரடியாக சென்று மாணவ, மாணவிகளுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து பேசினார்.

அப்போது அவர் பேசுகையில், ''மாணவ, மாணவிகள் தைரியமாகவும் நம்பிக்கையுடனும் தேர்வை எழுத வேண்டும். இந்த ஒரு தேர்வு மட்டும் தான் என எண்ணிவிடாதீர்கள் இதுபோன்ற அனைத்து போட்டித் தேர்வுகளிலும் கலந்து கொள்வதற்கான பயிற்சி பெற்றுள்ளோம். வெற்றியோ தோல்வியோ கவலைப்படாமல் தாங்கள் படித்து கவனமுடன் சிந்தித்து தேர்வை எழுதுங்கள் கண்டிப்பாக நீங்கள் அனைவரும் வெற்றி பெறுவீர்கள் என நம்பிக்கை உள்ளது'' என்றார்.


Related Tags :
Next Story