விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனச்சரகர்கள் வெளியேற கலெக்டர் உத்தரவு


விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனச்சரகர்கள் வெளியேற கலெக்டர் உத்தரவு
x

திருச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனச்சரகர்களை வெளியேற கலெக்டர் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருச்சி

திருச்சியில் விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வனச்சரகர்களை வெளியேற கலெக்டர் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் விவசாய சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

கடந்த முறை நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் விவசாய நிலங்களில் காட்டுப்பன்றிகள் உள்ளிட்ட விலங்குகள் விவசாய பயிர்களை நாசம் செய்வதாகவும், இந்த பிரச்சினைக்கு தீர்வுகாண வேண்டியும் கலெக்டரிடம் விவசாயிகள் வலியுறுத்தினர். இதற்கு நடவடிக்கை எடுக்க வனத்துறை அதிகாரிகளிடம் வலியுறுத்துவதாக கலெக்டர் உறுதியளித்தார்.

வனச்சரகர்கள் வெளியேற உத்தரவு

பின்னர் உதவி வன பாதுகாவலரை வரச்சொல்லி காட்டுப்பன்றி பிரச்சினைக்கு தீர்வு காண கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். இதையடுத்து நேற்று நடைபெற்ற விவசாயிகள் குறைதீர் கூட்டம் தொடங்கும் முன்பு உதவி வன பாதுகாவலர் வந்துள்ளாரா? என்று கலெக்டர் கேட்டார். அப்போது, வனத்துறையிலிருந்து வந்த வனச்சரகர்கள் எழுந்து நின்று வரவில்லை என பதில் அளித்தனர். இதனால் கோபம் அடைந்த கலெக்டர், வனச்சரகர்களை கூட்ட அரங்கை விட்டு வெளியேற உத்தரவிட்டார். இதையடுத்து கூட்ட அரங்கை விட்டு வனச்சரகர்கள் வெளியேறினர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அதன் பின் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது. விவசாயிகள் தங்களது குறைகளை மாவட்ட கலெக்டரிடம் தெரிவித்தனர்.


Next Story