விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர்


விபத்தில் சிக்கிய மாணவர்களை மீட்டு பள்ளிக்கு அனுப்பிய கலெக்டர்
x

காவேரிப்பாக்கம் அருகே விபத்தில் சிக்கிய மாணவர்களை கலெக்டர் மீட்டு பள்ளிக்கு அனுப்பினார்.

ராணிப்பேட்டை

காவேரிப்பாக்கம் அடுத்த பொன்னப்பதாங்கல் கூட்ரோடு வழியே நேற்று நெமிலி ஒன்றியத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டபணிகளை ஆய்வு செய்ய கலெக்டர் வளர்மதி காரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது புதுப்பட்டு காலனி பகுதியில் இருந்து தனியார் பள்ளியில் படிக்கும் 8 குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள முட்புதரின் மீது சாய்ந்தது.

இதை பார்த்ததும் கலெக்டர் காரை நிறுத்தி தன்னுடைய டிரைவர், உதவியாளருடன் பள்்ளி குழந்தைகளை மீட்டு காயம் ஏற்பட்டுள்ளதா என பார்வையிட்டார்.

பின்பு செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிகாரி வாகனத்தில் குழந்தைகளை ஏற்றி பள்ளிக்கு அனுப்பி வைத்தார். மேலும் இதுபோன்று பள்ளி குழந்தைகளை ஏற்றி வரும் வாகனங்கள் சரியாக உள்ளதா என்பதை ஆய்வு செய்ய வட்டாரப் போக்குவரத்து அலுவலரை மாவட்ட கலெக்டர் கேட்டுக்கொண்டார்.


Next Story