ரூ.2 கோடியில் பயனாளிகளுக்கு 46 வீடுகள் கட்டும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


ரூ.2 கோடியில் பயனாளிகளுக்கு 46 வீடுகள் கட்டும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 30 July 2023 12:41 PM IST (Updated: 30 July 2023 1:09 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மற்றும் வள்ளூர் தேசிய அணுமின் நிலையம் இணைந்து பழங்குடியின மக்களுக்கு ரூ.2 கோடியில் 46 வீடுகள் கட்ட நிதி ஒதுக்கியது. கட்டிட தொடக்க பணியை கலெக்டர் தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர்

மீஞ்சூர்,

மீஞ்சூர் ஒன்றியத்தில் உள்ள அத்திப்பட்டு கிராமத்தில் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் தமிழ்நாடு அரசின் நகர்ப்புற வாழ்விட மேம்பாடு வாரியம் மற்றும் வள்ளூர் தேசிய அணுமின் நிலையம் இணைந்து 46 வீடுகள் கட்டுவதற்காக தலா ரூ.4 லட்சத்து 60 ஆயிரம் வீதம் ரூ.2 கோடியே 11 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்நிலையில் கட்டிட பணியை தொடங்குவதற்காக நேற்று பூமி பூஜை நிகழ்ச்சி நடந்தது.

இதை திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். இதில் கூடுதல் ஆட்சியர் டாக்டர் சகபுத்ரா, பொன்னேரி சப்-கலெக்டர் ஐஸ்வர்யா ராமநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் சுகந்திவடிவேல், துணைத் தலைவர் கதிர்வேல் ஆகியோர் அனைவரையும் வரவேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் 46 பயனாளிகளுக்கு பணி ஆணைகள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமாமகேஸ்வரி, மீஞ்சூர் ஒன்றிய குழு தலைவர் ரவி, வட்டார வளர்ச்சி அலுவலர் குமார், சந்திரசேகர் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு அதிகாரிகள், அனல் மின் நிலைய அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story