மரக்கன்றுகள் நடும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்


மரக்கன்றுகள் நடும் பணி கலெக்டர்  தொடங்கி வைத்தார்
x

பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

ராணிப்பேட்டை

கலவை

பசுமை தமிழகம் இயக்கம் சார்பில் மரக்கன்றுகள் நடும் பணி கலெக்டர் தொடங்கி வைத்தார்

பசுமை தமிழகம் இயக்கத்தின் சார்பில் திமிரி ஒன்றியம் கலவையை அடுத்த ஆரூர் கிராமத்தில் மரக்கன்று நடும் பணியை கலெக்டர் பாஸ்கர பாண்டியன் தொடங்கி வைத்தார். அப்போது அவர் கூறுகையில், ''பசுமை தமிழக இயக்கத்தின் நோக்கம் அதிக அளவில் நாட்டு ரக மரக்கன்றுகளை நடுவதாகும். எனவே ஒவ்வொருவரும் ஒரு மரக்கன்று நட வேண்டும்.

மேலும் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் பனை விதைகள் நடவு செய்ய வேண்டும். இதனால் ஏரியில் நீர் வளம் பெருகும். பனை விதை நடவு செய்பவர்களுக்கு அரசு உதவி புரிகிறது'' என்றார்.

நிகழ்ச்சியில் திமிரி ஒன்றிய குழு தலைவர் அசோக், துணைத் தலைவர் ரமேஷ், மாவட்ட குழு உறுப்பினர் சிவக்குமார், தாசில்தார் சமீம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஷாநவாஸ், ஜெயஸ்ரீ, வனக் காவலர் ஆனந்தன், ஊராட்சி மன்ற தலைவர் தண்டபாணி மற்றும் வனத்துறையினர் உடனிருந்தனர்.


Next Story