மாட்டு வண்டியை ஓட்டி வந்த கலெக்டர்


மாட்டு வண்டியை ஓட்டி வந்த கலெக்டர்
x

நாட்டரசன் கோட்டையில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாட்டு வண்டி ஓட்டினார்.

சிவகங்கை

நாட்டரசன் கோட்டையில் சுற்றுலாத்துறை சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி மாட்டு வண்டி ஓட்டினார்.

பொங்கல் விழா

சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் சுற்றுலாத்துறை சார்பில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி இஸ்ரேல், பிரேசில், இங்கிலாந்து, ஜெர்மனி, இத்தாலி, நெதர்லாந்து போன்ற நாடுகளில் இருந்து 60-க்கும் மேற்பட்ட வெளிநாட்டு பயணிகள் நாட்டரசன்கோட்டைக்கு வந்தனர். இவர்களுக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி பொன்னாடை அணிவித்து மாலை அணிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொண்ட வெளிநாட்டு பயணிகளை மகிழ்விப்பதற்காக இந்திய பாரம்பரிய முறைப்படி மாட்டுவண்டியில் சுற்றி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது.

மாட்டுவண்டியில் வந்த கலெக்டர்

இதைத் தொடர்ந்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஒரு மாட்டு வண்டியில் ஏறி அவரே அதை ஓட்டி சென்றார்.சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு கலெக்டர் வண்டியை ஓட்டி சென்று விட்டு மீண்டும் திரும்பவும் புறப்பட்ட இடத்திற்கு வந்து சேர்ந்தார். நிகழ்ச்சிக்கு வந்திருந்த வெளிநாட்டு பயணிகளும் மாட்டு வண்டியில் ஏறி சுற்றி வந்தனர். இதைத்தொடர்ந்து தமிழர்களின் பாரம்பரிய முறைப்படி கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இவற்றை வெளிநாட்டவர்கள் கண்டு களித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ், சுற்றுலாத்துறை அலுவலர் வெங்கடாஜலபதி, பேரூராட்சி தலைவர் பிரியதர்ஷினி, வட்டாட்சியர் பஞ்சவர்ணம் உள்பட பல்வேறு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story