கல்லூரி பஸ் பள்ளத்தில் இறங்கியது


கல்லூரி பஸ் பள்ளத்தில் இறங்கியது
x

கல்லூரி பஸ் பள்ளத்தில் இறங்கியது.

புதுக்கோட்டை

விராலிமலை ஒன்றியம், களமாவூரில் மூகாம்பிகை என்ஜினீயரிங் கல்லூரி பஸ் ஒன்று நேற்று காலை கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள், மாணவ-மாணவிகள் உள்ளிட்ட 40 பேரை ஏற்றிக்கொண்டு திருச்சியில் இருந்து கல்லூரிக்கு சென்று கொண்டிருந்தது. பஸ்சை கண்ணதாசன் என்பவர் ஓட்டினார். திருச்சி-புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மண்டையூர் பிரிவு ரோடு அருகே பஸ் சென்ற போது திடீரென சைக்கிளில் சென்ற ஒருவர் சைகை ஏதும் காட்டாமல் சாலையை கடக்க முயன்றுள்ளார். திடீரென அதை கவனித்த பஸ் டிரைவர் சைக்கிளில் சென்றவர் மீது மோதாமல் இருக்க பஸ்சை திருப்பினார். அப்போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த பஸ் சாலை ஓரத்தில் உள்ள மழை நீர் வடிகால் பாலத்தின் கட்டையை உடைத்துக் கொண்டு அதன் கீழ் உள்ள 7 அடி பள்ளத்தில் இறங்கி விபத்திற்குள்ளானது. இதில் மாணவ-மாணவிகள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் லேசான காயத்துடன் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். விபத்தின் போது டிரைவர் சாமர்த்தியமாக செயல்பட்டு பெரிய அளவில் அசம்பாவிதம் ஏற்படாதவாறு பஸ்சை ஓட்டி உள்ளார். பின்னர் காயம் அடைந்த கல்லூரி பேராசிரியை உள்ளிட்டவர்கள் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் மாற்று பஸ் மூலம் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.


Related Tags :
Next Story