கோவில்பட்டியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம்


கோவில்பட்டியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம்
x
தினத்தந்தி 3 Dec 2022 6:45 PM GMT (Updated: 3 Dec 2022 6:46 PM GMT)

கோவில்பட்டியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டியில் இருந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணமாக தூத்துக்குடிக்கு புறப்பட்டனர்.

நடைபயணம்

தூத்துக்குடி சிதம்பர நகரில் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சார்பில் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றக்கோரி பொதுக்கூட்டம் நடக்கிறது.

இந்த கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சீனிவாசன் தலைமையில் 2 நாள் நடைபயணத்தை பயணிகள் விடுதி முன்பிருந்து நேற்று தொடங்கினார்கள். நடைபயணத்தை மாநில குழு உறுப்பினர் கே.அர்ஜூனன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

இதில் நகரச் செயலாளர் ஜோதி பாசு, ஒன்றிய செயலாளர் தெய்வேந்திரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் கிருஷ்ணவேணி, மணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் ரவீந்திரன், ஒன்றிய செயலாளர்கள் சாலமன் ராஜ், ஜோதி, ஜீவராஜ் உள்பட 50-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டார்கள்.

கோரிக்கைகள்

கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையத்தை அனைத்து வசதிகளுடன் செயல்படுத்த வேண்டும். மந்தித்தோப்பு ரோட்டை விரிவாக்கம் செய்ய வேண்டும். இளையரசனேந்தல் பிர்க்காவை கோவில்பட்டியுடன் இணைக்க வேண்டும். இளையரசனேந்தல் ரெயில்வே சுரங்க வழி பாதைக்கு இருபுறமும் சர்வீஸ் ரோடு அமைக்க வேண்டும். தீப்பெட்டி தொழிலை பாதுகாத்திட சிகரெட் லைட்டர்களை தடைசெய்ய வேண்டும். இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்திட புதிய தொழிற்சாலைகளை உருவாக்கிட வேண்டும். விவசாயிகளுக்கு உடனடியாக பயிர் காப்பீடு நிவாரணம் வழங்க கோரியும் இந்த நடைபயணம் நடக்கிறது.


Next Story