மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம்


மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம்
x
தினத்தந்தி 4 Dec 2022 6:45 PM GMT (Updated: 4 Dec 2022 6:46 PM GMT)

ஓட்டப்பிடாரத்தில் இருந்து தூத்துக்குடிக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நடைபயணம் மேற்கொண்டனர்.

தூத்துக்குடி

ஓட்டப்பிடாரம்:

ஓட்டப்பிடாரம் அருகே கொம்பாடி ஓடையில் தடுப்பணை கட்டவேண்டும், மழைக்காலங்களில் வீணாக கடலுக்கு செல்லும் தண்ணீரை தேக்கி வைக்க மலைப்பட்டியில் தடுப்பணை அமைத்து ஒட்டன்கால்வாய் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஓட்டப்பிடாரத்தில் அரசு கலைக்கல்லூரி மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி திறக்க வேண்டும், புதியம்புத்தூரில் ஆயத்த ஆடை பூங்கா தொடங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று முன்தினம் காலையில் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி வரை நடை பயணத்தை தொடங்கினர். நேற்று இரவு பசுந்தனை வழியாக ஓட்டப்பிடாரத்தில் நடை பயணத்தை நிறைவு செய்தனர்.

அங்கிருந்து நேற்று காலையில் கோரிக்ைககளை வலியுறுத்தி கட்சி ஒன்றிய செயலாளர் சண்முகராஜ் தலைமையில் யூனியன் கவுன்சிலர் சித்ராதேவி மற்றும் கட்சியினர் நடை பயணத்தை தொடங்கினர். இந்த நடைபயணம் புதியம்புத்தூர் வழியாக தூத்துக்குடிக்கு சென்றடைந்தது. வழிநெடுகிலும் அவர்கள் கோரிக்ைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.


Next Story