தியாகதுருகத்தில்தடையை மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் :69 பேர் கைது


தியாகதுருகத்தில்தடையை மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டம் :69 பேர் கைது
x
தினத்தந்தி 15 Sept 2023 12:15 AM IST (Updated: 15 Sept 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

தியாகதுருகத்தில் தடையை மீறி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்ட 69 பேர் கைது செய்யப்பட்டனா்.

கள்ளக்குறிச்சி


தியாகதுருகம்,

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விலை வாசி உயர்வை கண்டித்தும், வேலை வாய்ப்பு இன்மை, நீட்தேர்வை திரும்ப பெற வேண்டும் என்பது போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தியாகதுருகத்தில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி எதிரே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட திரண்டு வந்தனர்.

முன்னதாக அவர்கள், வங்கிக்கு எதிரே நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் வளர்மதி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

இந்த நிலையில் தடையை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி, தியாகதுருகம் போலீசார், 61 பெண்கள் உள்பட 69 பேரை கைது செய்து, அங்குள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் மாலையில் விடுவிக்கப்பட்டார்கள்.


Next Story