இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
x

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருவாரூர்


விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தக்கோரி இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் போராட்டம்

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை குறைத்திட வேண்டும். அத்தியாவசிய பொருட்களுக்கு ஜி.எஸ்.டி. வரியை நீக்கிட வேண்டும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும். பொதுத்துறைகளை தனியாருக்கு தாரை வார்ப்பதை கைவிட வேண்டும். 100 நாள் வேலை திட்டத்தினை தொடர்ந்து வழங்க வேண்டும்.

மின்சார திருத்த சட்டத்தை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி நகர, ஒன்றிய குழுக்கள் சார்பில் மறியல் போராடடம் நடந்தது. பேராட்டத்திற்கு மாநில நிர்வாகக்குழு உறுப்பினர் மாசிலாமணி தலைமை தாங்கினார். இதில் நகர செயலளார் செல்வம், ஒன்றிய செயலாளர் நாகராஜன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் புலிகேசி, மாரியப்பன், மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முருகானந்தம், நகர துணை செயலாளர் தர்மதாஸ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கொரடாச்சேரி

இதேபோல இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கொரடாச்சேரி தபால் நிலையம் முன்பு மறியல் போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்திற்கு கட்சியின் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஜோசப் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக் குழு உறுப்பினர் கேசவராஜ், ஒன்றியச் செயலாளர் சிவானந்தம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, கட்சிய ஒன்றியக் குழு உறுப்பினர்கள் பன்னீர்செல்வம், ஜெயபால், மணியன் உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

நீடாமங்கலம்

இதேபோல நீடாமங்கலம் தபால்நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்திற்கு கட்சியின் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் ஞானமோகன் முன்னிலை வகித்தார். இதில் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல், கியாஸ் விலை உயர்வை குறைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் தேசிய குழு உறுப்பினர் பழனிச்சாமி தலைமையில் போராட்டம் நடந்தது. மாநில குழு உறுப்பினர் உலகநாதன், மாநில கட்டுப்பாட்டு குழு உறுப்பினர் வையாபுரி, மாரிமுத்து எம்.எல்.ஏ, ஊராட்சி ஒன்றிய தலைவர் பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாதர் சங்க மாவட்ட செயலாளர் தமயந்தி உள்பட 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

முத்துப்பேட்டை

முத்துப்பேட்டை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் முருகையன், ஒன்றிய செயலாளர் உமேஷ் பாபு, நகர செயலாளர் மார்க்ஸ் ஆகியோர் தலைமையில் போராட்டம் நடந்தது. முன்னதாக புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக புறப்பட்டு ஆசாத்நகர், திருத்துறைப்பூண்டி சாலை, பழைய பஸ் நிலையம், குமரன் பஜார், மன்னார்குடி சாலை வழியாக தபால் நிலையத்தை அடைந்தனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், விவசாய சங்கத்தினர் கலந்துக்கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

கூத்தாநல்லூர்

கூத்தாநல்லூர் தலைமை தபால் நிலையம் முன்பு இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் மறியல் போராட்டம் நடந்தத. போராட்டத்திற்கு நகர செயலாளர் முருகேசு முன்னிலை வகித்தார்.மாவட்ட குழு உறுப்பினர் தவபாண்டியன் தலைமை தாங்கினார். முன்னதாக லெட்சுமாங்குடி பாலத்தில் இருந்து தலைமை தபால் நிலையம் வரை ஊர்வலமாக சென்றனர். இதில், இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் பலர் கலந்து கொண்டனர்.


Next Story