இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் முயற்சி


இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் முயற்சி
x
தினத்தந்தி 19 Oct 2023 6:45 PM GMT (Updated: 19 Oct 2023 6:45 PM GMT)

திருப்பூண்டியில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல் முயற்சி

நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி:

திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் மருத்துவமனை தெரு, புது தெருவில் கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வருபவர்களுக்கு அரசு வழங்கும் கான்கிரீட் வீடு கட்டுவதற்கு பட்டா வழங்கவேண்டும். 100 நாள் வேலைக்கான கூலியை முழுமையாக வழங்கக்கோரியும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஹாஜாஅலாவுதீன் தலைமையில் திருப்பூண்டி கிழக்கு கடற்கரை சாலையில் மறியல் நடத்த போவதாக அறிவித்திருந்தனர். இது குறித்து தகவல் அறிந்த கீழையூர் வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றிச்செல்வன், ஒன்றியக்குழு தலைவர் செல்வராணி ஞானசேகரன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகா சத்தியராஜ், துணைத்தலைவர் முகமதுரபீக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட முயன்றவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக அதிகாரிகள் உறுதி அளித்ததின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. இதில் மாநிலக்குழு உறுப்பினர் செல்வம், விவசாய தொழிலாளர் சங்க ஒன்றிய செயலாளர் சுப்பிரமணியன், இந்திய நிர்வாக குழு உறுப்பினர் ராமலிங்கம் உள்ளிட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்துகொண்டனர்.


Next Story