கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்


கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம்
x

கந்திலியில் கம்யூனிஸ்டு கட்சியினர் மறியல் போராட்டம் நடைபெற்றது.

திருப்பத்தூர்

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலியில் பா.ஜ.க. அரசை கண்டித்தும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு மாவட்ட குழு சாமிக்கண்ணு தலைமை தாங்கினார். எம்.நந்தி முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சுந்தரேசன் மறியல் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருப்பத்தூர் - கிருஷ்ணகிரி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கலந்துகொண்ட தேவராஜ், நகர துணை செயலாளர் முருகன், அண்ணாமலை, ஆர்.வெங்கடேன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.


Next Story