உளுந்தூர்பேட்டையில் மிஸ்கூவாகம் போட்டி நடத்தப்படும்


உளுந்தூர்பேட்டையில் மிஸ்கூவாகம் போட்டி நடத்தப்படும்
x

உளுந்தூர்பேட்டையில் மிஸ்கூவாகம் போட்டி நடத்தப்படும் என்று தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

உளுந்தூர்பேட்டை,

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே உலக புகழ்பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு தோறும் சித்திரை திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா அடுத்த மாதம் (ஏப்ரல்) 18-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. வழக்கமாக இந்த விழாவில் போது விழுப்புரத்தில் மிஸ் கூவாகம் போட்டி நடைபெறும். ஆனால் இந்தாண்டு முதல் கோவில் அமைந்து இருக்கும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் மிஸ் கூவாகம் போட்டியை நடத்த வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்துள்ளனர். குறிப்பாக உளுந்தூர்பேட்டையில் இந்த போட்டியை நடத்த பலரும் விருப்பம் தெரிவி்த்துள்ளனர். இந்த நிலையில் தென்னிந்திய திருநங்கை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அருணா தலைமையிலான திருநங்கைகள் மிஸ்கூவாகும் போட்டி நடத்துவது தொடர்பாக உளுந்தூர்பேட்டைக்கு வந்தனர். பின்னர் ஒருங்கிணைப்பாளர் அருணா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், இந்தாண்டு மிஸ் கூவாகம் போட்டியில் 50 சதவீதம் உளுந்தூர்பேட்டையில் நடத்தப்படும். மேலும் இது தொடர்பாக இங்குள்ள அரசியல் கட்சி தலைவர்கள், பல்வேறு அமைப்பினரை சந்தித்து அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும். விழாவிற்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் அரசு செய்து கொடுக்க வேண்டும் என்றார்.


Next Story