அரசு பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது


அரசு பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது
x

அரசு பள்ளி வகுப்பறையில் கான்கிரீட் மேற்கூரை பெயர்ந்து விழுந்தது

தஞ்சாவூர்

கும்பகோணம் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்தி கொண்டிருந்த போது மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. இதில் மாணவர்கள் காயமின்றி தப்பினர்.

கான்கிரீட் பூச்சு பெயர்ந்தது

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே சோழபுரம் விளந்த கண்டம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. கடந்த 2017-2018-ம் ஆண்டு பள்ளி மேலாண்மை திட்டத்தில் அரசு நிதி ஒதுக்கீடு செய்தது. இதன் மூலம் இந்த பள்ளி கட்டிடம் செயல்பட்டு வருகிறது.

நேற்றுமுன்தினம் 6-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஒரு வகுப்பறையில் ஆசிரியர் பாடம் நடத்திக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென வகுப்பறையின் மேற்கூரையின் கான்கிரீட் பெயர்ந்து விழுந்தது. அப்போது மேற்கூரையில் இருந்த மின்விசிறி சுழன்று கொண்டு இருந்ததால் கான்கிரீட் பூச்சுகள் நாலாபுறமும் சிதறி வகுப்பறையில் இருந்த 4 மாணவர்கள் மீது விழுந்தது. இதனால் மாணவர்கள் அவசரமாக வகுப்பறையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

மாணவர்கள் காயமின்றி தப்பினர்

இதையடுத்து அங்கிருந்த ஆசிரியர்கள் உடனடியாக 4 மாணவர்களையும் சோழபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு மாணவர்களை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர்களுக்கு காயம் ஏதும் இ்ல்லை என தெரிவித்தனர். மேற்கூரை பெயர்ந்து விழுந்தது குறித்து வருவாய்த்துறையினர், பள்ளிக்கல்வி துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story