காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுக்கோட்டை
திருவரங்குளம் கடைவீதியில் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் சார்பில் மணிப்பூர் கலவரத்தை கண்டித்தும், மணிப்பூர் கலவரத்தை அடக்க முடியாத மத்திய அரசை கண்டித்தும் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி துணை தலைவர் திருக்கட்டளை ஜெயபால் தலைமை தாங்கினார். தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான ராமசுப்புராம் முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட, நகர, ஒன்றிய காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், உறுப்பினர்கள், மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story