காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம்
தஞ்சாவூர்
பட்டுக்கோட்டை:
மணிப்பூர் கலவரத்தை கண்டித்து பட்டுக்கோட்டை சட்டசபை தொகுதி காங்கிரஸ் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு நகர காங்கிரஸ் தலைவர் வக்கீல் ராமசாமி தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் அன்பழகன், கோவிசெந்தில், ரங்கநாதன், அதிராம்பட்டினம் நகர காங்கிரஸ் தலைவர் தமிம் அன்சாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் குணாபரமேஸ்வரி, கலைச்செல்வன், மாவட்ட நிர்வாகிகள் சக்திவேல், மதிவாணன், இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் ரகுநாத்யோகானந்தம், முத்து, பாண்டித்துரை, காங்கிரஸ் நிர்வாகிகள் தாயுமானவன், மாரிமுத்து, ஜோதி, விஜயரங்கன், பழனி மற்றும் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story