மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் - அண்ணாமலை பேச்சு


மதுரை ஆதீனத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் - அண்ணாமலை பேச்சு
x

மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

திருச்சி,

திருச்சியில் பாஜகவின் 8 ஆண்டு கால சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

அமைப்பு சார தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் 62 லட்சம் தொழிலாளர்களுக்கு 2 லட்சம் உதவித்தொகை வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஏழை மக்கள் உயரவேண்டும் அவர்களும் முதலாளிகளாக ஆகவேண்டும் என்பதற்காக பல நல்ல திட்டங்களை மத்திய அரசு கொண்டு வந்துள்ளது.

ஜிஎஸ்டியில் எவ்வளவு நிதி தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க ஸ்டாலினுக்கே தெரியவில்லை. பிரதமர் சென்னைக்கு வந்த போது ஜிஎஸ்டி நிலுவை தொகையை தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டும் என கேட்டார். ஜிஎஸ்டியின் வாயிலாக ரூ.9,602 கோடி அதை நாங்கள் கொடுத்து விட்டோம் என்று பிரதமரே மேடையில் கூறி விட்டார்.

தற்போது இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாப புது காஸ்டியூம் போட்டுள்ளார். மீண்டும் காவி வேட்டி கட்ட துவங்கியுள்ளார். மதுரை ஆதீனத்தை தொடர்ந்து அமைச்சர் சேகர்பாபு மிரட்டி வருகிறார்.

மதுரை ஆதினத்தை மிரட்டினால் விளைவுகள் மோசமாக இருக்கும். சிதம்பரம் கோவில் விவகாரத்திலும் அமைச்சர் சேகர் பாபு தலையிடுகிறார்.

பால்வளத்துறை அமைச்சர் நாசர் மற்றும் மருத்துவத் துறை அமைச்சர் போட்டிபோட்டு பேட்டி கொடுத்து வருகின்றனர். நியூட்ரீசன் திட்டத்தில் கமிஷன் நடைபெற்றுள்ளது. அதை ஆதாரத்தோடு நாங்கள் நிரூபிக்க உள்ளோம். அனைத்து இடத்திலும் ஊழல் செய்யும் ஒரு கட்சியாக திமுக வளர்ந்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story