மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்


மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும்
x

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் 2026-ம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று தர்மபுரியில் மத்திய இணை மந்திரி பாரதி பிரவின் பவார் கூறினார்.

தர்மபுரி,

தமிழ்நாடு பெருமை வாய்ந்த கலாசாரங்களை கொண்ட மாநிலம். மத்திய அரசு மக்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

பிரதமர் படம்

தமிழக அரசு மத்திய அரசு நிதியில் ஒதுக்கும் திட்டங்களில் பிரதமர் படத்தையும், மத்திய அரசு சின்னங்களையும் வெளியிடுவதில்லை. சுகாதார திட்டங்கள் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த விளம்பரங்களுக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.24 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று தர்மபுரி மாவட்டத்திற்கும் இந்த விழிப்புணர்வு பணிக்காக ரூ.68 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த விழிப்புணர்வு விளம்பரங்களில் மத்திய அரசின் நிதி என்றும், பிரதமரின் புகைப்படமும் இடம்பெறவில்லை. இது மிகவும் வருத்தம் அளிக்கிறது. இனிவரும் காலங்களில் இது போன்ற செயல்கள் நடைபெறாத வண்ணம் அலுவலர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் கொரோனா தொற்று பரவல் காரணமாக தடைப்பட்டது. மத்திய அமைச்சரவை இதற்காக நிதியை ஒதுக்கியது. இப்போது மறு மதிப்பீடு செய்யப்பட்டு, தற்போது ரூ.1,977 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஒப்பந்த புள்ளி பணிகள் நடைபெற்று வருகின்றன.

கட்டுமான பணிகள்

தற்காலிகமாக அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் எம்.பி.பி.எஸ் பாடப்பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்று, வகுப்புகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதன் மூலம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை செயல்பாட்டில் தான் உள்ளது. 2026-ம் ஆண்டுக்குள் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் கட்டுமான பணிகள் முழுமையாக நிறைவடையும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story