ராட்சத தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது


ராட்சத தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது
x
தினத்தந்தி 9 July 2023 12:30 AM IST (Updated: 9 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

காந்தையாற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் உயர்மட்டபாலம் கட்ட ராட்சத தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது.

கோயம்புத்தூர்
மேட்டுப்பாளையம்


காந்தையாற்றின் குறுக்கே ரூ.14 கோடியில் உயர்மட்டபாலம் கட்ட ராட்சத தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது.


காந்தையாறு


கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே சிறுமுகையை அடுத்த லிங்காபுரம் காந்தவயல் இடையே காந்தையாறு உள்ளது. இதன் குறுக்கே பவானிசாகர் அணை நீர்த்தேக்கப் பகுதியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை சார்பில் கடந்த 2005-ம் ஆண்டு உயர்மட்ட பாலம் கட்டப்பட்டது. இது மழை காலங்க ளில் தண்ணீரில் மூழ்கியதால் மக்களுக்கு பயன்படாமல் இருந்து வந்தது.


எனவே புதிதாக உயர்மட்டப்பாலம் கட்டித்தர வேண்டும் என்று அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் புதிய பாலம் கட்ட ஆய்வு செய்து திட்ட அறிக்கை தயாரித்து அரசுக்கு அனுப்பி வைத்தனர்.


புதிய பாலம் கட்டும் பணி


இதையடுத்து நெடுஞ்சாலை துறை நபார்டு மற்றும் கிராம சாலை கள் திட்டத்தின் கீழ் உயர்மட்ட பாலம் கட்ட ரூ.14 கோடி ஒதுக் கப்பட்டது. இதனால் நெடுஞ்சாலை துறை மேற்பார்வை என்ஜினீ யர் அருள்மொழி தலைமையில் கோட்ட என்ஜினீயர் சோமசுந்த ரம், உதவி கோட்ட என்ஜினீயர் குருமூர்த்தி ஆகியோர் மேற் பார்வையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.


பழைய பாலத்திற்கு அருகே புதிய பாலம் 560 அடி நீளம், 30 அடி அகலம், பழைய பாலத்தை விட 7 அடி உயரம் அதிகமாக அமைக்கப்படுகிறது. இதற்காக 6 ராட்சத தூண்கள் மற்றும் 2 நடைபாதை வசதிகள் அமைக்கப்பட உள்ளது. இதற்காக ராட்சத தூண்கள் அமைக்க அஸ்திவாரம் தோண்டப்பட்டு கம்பி கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும் 2 இடங்களில் மண் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.


மாற்றுப்பாதை


கல்குவாரி வேலை நிறுத்தம் முடிந்து விட்டதால் கான்கிரீட் அமைக்கும் பணி முழுவீச்சில் நடைபெற தொடங்கி உள்ளது. புதிய பாலம் அமைக்கப்பட உள்ளதால் லிங்காபுரத்தில் இருந்து காந்தவயல் செல்ல பொக்லைன் எந்திரம் மூலம் மாற்றுப்பாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.


மழைக்காலம் தொடங்குவதற்கு முன்னர் உயர் மட்ட பாலம் அமைக்கும் பணியை விரைந்து முடிக்க நெடுஞ்சாலை துறையினர் போர்க்கால நடவடிக்கை மேற்கொண்டு உள்ளனர்.



Next Story