கட்டிட பணிகளை மழை காலத்திற்குள் முடிக்க வேண்டும்


கட்டிட பணிகளை மழை காலத்திற்குள் முடிக்க வேண்டும்
x

கட்டிட பணிகளை மழை காலத்திற்குள் முடிக்க வேண்டும் திட்ட இயக்குனர் உத்தரவிட்டார்.

திருப்பத்தூர்

மாதனூர் ஊராட்சி ஒன்றியம், துத்திப்பட்டு ஊராட்சியில் உள்ள அம்பேத்கர் நகர், கன்றாம்பல்லி, மதன்நகர் ஆகிய பகுதிகளில் அங்கன்வாடி, பள்ளி கட்டிடம், கழிவறை கட்டும் பணிகள் நடந்து வருகிறது. இப்பணிகளை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது பணிகளை தரமாகவும், மழைக்காலத்திற்கு முன்பும் விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.

ஆய்வின் போது ஒன்றிய ஆணையாளர் சுரேஷ்பாபு, ராஜேந்திரன், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தணிகைஅரசு, பணி மேற்பார்வையாளர் நிர்மலா, ஊராட்சிமன்ற தலைவர் சுவிதாகணேஷ், துணைத் தலைவர் விஜய், ஊராட்சி செயலாளர் பாலகிருஷ்ணன் மற்றும் ஊராட்சி உறுப்பினர்கள் உடன் இருந்தனர்.


Next Story