ஒரே நாளில் 1840 பேருக்கு கொரோனா தடுப்பூசி


ஒரே நாளில் 1840 பேருக்கு கொரோனா தடுப்பூசி
x

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 1840 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

கோயம்புத்தூர்

பொள்ளாச்சி

பொள்ளாச்சி பகுதியில் ஒரே நாளில் 1,840 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.

சிறப்பு முகாம்

தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதை கட்டுப்படுத்தும் வகையில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்த உத்தரவிடப்பட்டது. அதன்படி பொள்ளாச்சி நகரம், பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம், ஆனைமலை ஒன்றியம், சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் 150-க்கும் மேற்பட்ட இடங்களில் கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

இதில் முதல் தவணை, 2-ம் தவணை என மொத்தம் 1,312 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. சுல்தான்பேட்டை ஒன்றியத்தில் தடுப்பூசி போடும் பணிகளை வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் வனிதா, சுகாதார ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர். பின்னர் தடுப்பூசி போட்டவர்களிடம் கொரோனா தடுப்பு முறைகள் குறித்து விளக்கினர்.

காலை முதல் மாலை வரை

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் சுகாதாரத்துறை மூலம் 31-வது கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அங்கன்வாடி மையங்கள் மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் நடைபெற்றது. மொத்தம் 148 மையங்களில் தடுப்பூசி போடும் பணி காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடந்தது. நல்லட்டிபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் சித்ரா தொடங்கி வைத்து பார்வையிட்டார். இங்கு 528 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது. முகாமில் டாக்டர்கள் சமீதா, பிரபு, பிரித்திகா, சுகாதார ஆய்வாளர் குணசேகரன் மற்றும் மருத்துவ பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் கலந்து கொண்டனர்.


Next Story