தூக்கில் தொழிலாளி பிணம்


தூக்கில் தொழிலாளி பிணம்
x
தினத்தந்தி 29 July 2023 12:15 AM IST (Updated: 29 July 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மயிலாடுதுறை அருகே தூக்கில் தொழிலாளி பிணம்

மயிலாடுதுறை


மயிலாடுதுறை திருவிழந்தூர் கவரத்தெருவை சேர்ந்தவர் சுந்தரமூர்த்தி (வயது 61). இவர் மயிலாடுதுறை அருகே உளுத்துக்குப்பை பனம்பள்ளி பகுதியில் உள்ள ஒரு செங்கல் சூளையில் கல் அறுக்கும் தொழியாளியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் சம்பவத்தன்று செங்கல் சூளையில் சுந்தரமூர்த்தி தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார். இதை அந்த வழியாக சென்ற பொதுமக்கள் பார்த்து மயிலாடுதுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சுந்தரமூர்த்தி உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து சுந்தரமூர்த்தியின் மனைவி செல்வி கொடுத்த புகாரின் பேரில் மயிலாடுதுறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story