ரோந்து பணிக்கு சென்றசப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தம்பதி


ரோந்து பணிக்கு சென்றசப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தம்பதி
x

ராஜபாளையம் அருகே ரோந்து பணிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தம்பதி, மதுபாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடினர்.

விருதுநகர்

ராஜபாளையம்

ராஜபாளையம் அருகே ரோந்து பணிக்கு சென்ற சப்-இன்ஸ்பெக்டரை தாக்கிய தம்பதி, மதுபாட்டில்களை போட்டு விட்டு தப்பி ஓடினர்.

மது விற்ற தம்பதி

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சுந்தரராஜபுரம் மாசானம் கோவில் அருகில் சேத்தூர் புறநகர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த சுருளி, அவருடைய மனைவி தெய்வத்தாய் ஆகிய இருவரும் பெட்டிக்கடைக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் மதுபாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

சப்-இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்

அவர்கள் இருவரும் போலீசாரை பார்த்ததும் தப்பி ஓட முயற்சி செய்தனர். அப்போது சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் அவர்களை தடுத்தார். எனவே கணவனும், மனைவியும் சேர்ந்து சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜை தாக்கி விட்டு, மதுபாட்டில்களை போட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர்.

பின்னர் 36 மதுபாட்டில்களையும், இருசக்கர வாகனத்தையும் போலீசார் கைப்பற்றினர். காயம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் ராஜபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். இந்த சம்பவம் குறித்து சேத்தூர் புறநகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story