வாய்பேச முடியாத தம்பதி போலீசில் புகார்


வாய்பேச முடியாத தம்பதி போலீசில் புகார்
x

ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தை மீட்டுத்தர கோரி வாய்பேச முடியாத தம்பதியினர் போலீசில் புகார் செய்தனர்.

தேனி

பெரியகுளம் தென்கரை தெற்கு புதுத்தெருவை சேர்ந்தவர் ஆதிசரவணன். இவர் தனது மனைவி அனிதாவுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தார். பின்னர் அவர் போலீஸ் சூப்பிரண்டு பிரவீன் உமேஷ் டோங்கரேவிடம் ஒரு புகார் மனு கொடுத்தார். அதில், "நான் பிறவியிலேயே வாய் பேச முடியாத, காது கேளாத மாற்றுத்திறனாளி. எனது மனைவியும் வாய்பேச முடியாத காது கேளாத மாற்றுத்திறனாளி. எங்கள் குடும்பத்துக்கு சொந்தமான நிலம் தென்கரை பகுதியில் உள்ளது. எங்கள் நிலத்தில் சிலர் அத்துமீறி புகுந்து ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர். இதுகுறித்து கேட்க சென்றால் மிரட்டுகின்றனர்.

எனவே, மாற்றுத்திறனாளியான எங்களின் வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய நிலத்தை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று கூறப்பட்டு உள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story