பள்ளத்தில் மாடு விழுந்தது


பள்ளத்தில் மாடு விழுந்தது
x
தினத்தந்தி 27 July 2023 12:30 AM IST (Updated: 27 July 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

மின்கம்பத்துக்காக தோண்டிய பள்ளத்தில் மாடு விழுந்தது

சிவகங்கை

காரைக்குடி

காரைக்குடி கழனிவாசல் பகுதியில் இருந்து சூரக்குடி செல்லும் சாலையில் உயர் மின்கம்பம் நடும் பணிக்காக மின்வாரியம் சார்பில் 10 அடி வரை பள்ளம் தோண்டப்பட்ட பணிகள் நடைபெற்றது. இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் சுற்றித்திரிந்த காளை மாடு ஒன்று அந்த பள்ளத்தில் திடீரென விழுந்தது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக அங்கு வந்த தீயணைப்பு துறையினர் அப்பகுதி பொதுமக்களின் உதவியுடன் நீண்ட நேரம் போராட்டத்திற்கு பின்னர் அந்த மாட்டை அந்த பள்ளத்தில் இருந்து வெளியே மீட்டனர். இதையடுத்து அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து போலீசார் போக்குவரத்தை சீரமைத்தனர்.


Next Story