கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு


கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு
x

மூங்கில்துறைப்பட்டு அருகே கிணற்றில் தவறி விழுந்த பசுமாடு தீயணைப்பு வீரர்கள் போராடி மீட்டனர்

கள்ளக்குறிச்சி

மூங்கில்துறைப்பட்டு

மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள மல்லாபுரம் பகுதியை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 40). இவருக்கு சொந்தமான பசுமாடு ஒன்று வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்தபோது தவறி கிணற்றில் விழுந்து உயிருக்கு போராடிக்கொண்டிருந்தது. இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன் பேரில் சங்கராபுரம் தீயணைப்பு நிலைய அலுவலர் ஜெயேந்திரன் தலைமையில் தீயணைப்புவீரர்கள் விரைந்து வந்து 2 மணி நேரத்துக்கும் மேலாக போராடி பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.


Next Story