திருவெண்ணெய்நல்லூர் அருகேநாட்டுவெடி வெடித்து மாட்டின் வாய்கிழிந்தது


திருவெண்ணெய்நல்லூர் அருகேநாட்டுவெடி வெடித்து மாட்டின் வாய்கிழிந்தது
x
தினத்தந்தி 21 May 2023 12:15 AM IST (Updated: 21 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

திருவெண்ணெய்நல்லூர் அருகே நாட்டுவெடி வெடித்து மாட்டின் வாய்கிழிந்தது.

கள்ளக்குறிச்சி


திருவெண்ணெய்நல்லூர்,

திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள கொத்தனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமர் மகன் கோவிந்தன்(வயது 55). இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். இவர் நேற்று தனது மாடுகளை வயல்வெளிக்கு ஓட்டிச் சென்று மேய்ச்சலுக்கு விட்டு இருந்தார். பின்னர் மாலையில் அந்த மாடுகளை வீட்டிற்கு ஓட்டி வந்தார். அப்போது கரும்பு தோட்டத்தில் ஒரு மாடு மேய்ந்தபோது திடீரென நாட்டுவெடி வெடித்து, மாட்டின் வாய் கிழிந்து ரத்தம் கொட்டியது. கரும்புகளை நாசம் செய்யும் பன்றிகளை ஒழிப்பதற்காக வைத்திருந்த நாட்டு வெடியை அந்த மாடு உணவு என்று நினைத்து கடித்தபோது, அது வெடித்தது தெரியவந்தது.


Next Story