பெண்களை கொச்சைப்படுத்துவது தான் திராவிட மாடலா? யாரும் என்னை சீண்டி பார்க்காதீர்கள் - குஷ்பு கண்டனம்


பெண்களை கொச்சைப்படுத்துவது தான் திராவிட மாடலா? யாரும் என்னை சீண்டி பார்க்காதீர்கள்  -  குஷ்பு கண்டனம்
x

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது நல்லதல்ல, திமுக பேச்சாளருக்கு தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

திமுகவை சேர்ந்த பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி அவதூறாக பேசியதாக நடிகையும் பாஜக நிர்வாகியுமான குஷ்பு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது குஷ்பு கூறியதாவது:-

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பெண்களை அசிங்கப்படுத்தி பேசுவது நல்லதல்ல, பெண்களை அவதூறாக பேச உரிமை கொடுத்தது யார்? எந்த ஒரு ஆணுக்கும் தனிப்பட்ட முறையில் ஒரு பெண்ணை பற்றிப் பேச தகுதி கிடையாது. தேசிய மகளிர் ஆணையம் மூலமாக தாமாக முன் வந்து திமுக பேச்சாளர் மீது நடவடிக்கை எடுக்க உள்ளோம்.

ஒரு பெண்ணாக யாரும் என்னை சீண்டி பார்க்காதீர்கள்,திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்.

பெண்களை கொச்சைப்படுத்துவதான் திராவிட மாடலா? பெண்கள் குறித்து அவதூறாக பேசுவதை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அனுமதிக்ககூடாது. பெண்களை இழிவுப்படுத்துவோர் எந்த கட்சியினராக இருந்தாலும் அது தவறு தான். பெண்களை அவதூறாக பேசுவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.


Related Tags :
Next Story