வனப்பகுதியில் குட்டியானை சாவு
வனப்பகுதியில் குட்டியானை சாவு
கோயம்புத்தூர்
காரமடை
கோவை மாவட்டம் காரமடை அருகே மானார் வனப்பகுதியில் வழக்கமாக வனச்சரகர் திவ்யா தலைமையில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அடர்ந்த வனப்பகுதியில் சுமார் 4 வயதுடைய ஆண் குட்டியானை இறந்த நிலையில் கிடந்தது. இதை அறிந்த உதவி வனபாதுகாவலர் செந்தில்குமார், வன கால்நடை டாக்டர் சுகுமார், தேக்கம்பட்டி கால்நடை டாக்டர் சவிதா ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். டாக்டர்கள் குழுவினர் இறந்த யானையின் உடலை பிரேத பரிசோதனை செய்து, சில பாகங்களை ஆய்வுக்கு எடுத்து சென்றனர். அந்த ஆய்வுக்கு பிறகு யானை இறந்ததற்கான காரணம் தெரியவரும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். தொடர்ந்து வனத்துறையினர் இறந்த யானையின் உடலை அப்பகுதியிலேயே குழி தோண்டி புதைத்தனர்.
Related Tags :
Next Story