சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் சுங்கத்துறை குடியிருப்பு வளாகம்


சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் சுங்கத்துறை குடியிருப்பு வளாகம்
x

சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் சுங்கத்துறை குடியிருப்பு வளாகம்

நாகப்பட்டினம்

நாகை காடம்பாடியில் சமூக விரோதிகளின் கூடாரமாக சுங்கத்துறை குடியிருப்பு வளாகம் மாறி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குடியிருப்பு வளாகம்

நாகை முதலாவது கடற்கரை சாலையில் சுங்கத்துறை உதவி ஆணையர் அலுவலகம் இயங்கி வருகிறது. கடல் மற்றும் கடலோரப்பகுதிகளில் சட்டவிரோதமாக கள்ளக்கடத்தலில் ஈடுபடுவதை சுங்க கடத்தல் தடுப்பு பிரிவினர் கண்காணிக்கின்றனர். இதனால் அவ்வப்போது கடத்தப்படும் தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் பிடிக்கப்பட்டு குற்ற செயலில் ஈடுபடுவோரை கைது செய்து சிறையில் அடைப்பது வாடிக்கையாகும். இந்த அலுவலகத்தில் பணிபுரியும் அலுவலர் உள்பட பணியாளர்களுக்கு நாகை காடம்பாடியில் குடியிருப்பு வளாகம் உள்ளது. இந்த குடியிருப்பு வளாக கட்டிடங்கள் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை பராமரிக்கப்பட்டு வந்தது. தற்போது இந்த குடியிருப்பு வளாகம் பராமரிப்பின்றி காணப்படுகிறது.

சமூக விரோதிகளின் கூடாரமாக

இதனை பயன்படுத்தி சமூக விரோதிகள் சிலர் மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். மேலும் சிலர் சூதாட்டம் உள்ளிட்ட பல்வேறு குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். இதனால் குடியிருப்பு வளாகம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவதை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தடுத்து வளாகத்தை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கேரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,

நாகையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை கப்பல் போக்குவரத்து சிறப்பாக செயல்பட்டு வந்தது. இதனால் சுங்கத்துறை அலுவலகம் எப்போதும் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் இந்த காடம்பாடி பகுதியில் இருந்த சுங்கத்துறை குடியிருப்பு வளாகமும் நன்றாக இருந்தது. தற்போது நாகையில் சுனாமி தாக்குதலுக்கு பிறகு குடியிருப்பு வளாகத்தில் பகல் நேரங்களில் சமூக விரோதிகள் உள்ளே ெசன்று பல்வேறு அசம்பாவித சம்பவத்தில் ஈடுபடுவது அந்த வழியாக செல்வோரை முகம் சுளிக்க வைக்கிறது.

பராமரிக்க வேண்டும்

மேலும் அங்கு சிலர் அமர்ந்து மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே வீசி செல்கின்றனர். இதனால் அந்த வழியாக செல்லும் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் அச்சத்துடன் சென்று வருகின்றனர். இது குறித்து பலமுறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவரும் குடியிருப்பு வளாகத்தை பராமரித்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story