'தினத்தந்தி' செய்தி எதிரொலி: அரசு பஸ்சில் ஊர் பெயர் எழுதப்பட்டது


தினத்தந்தி செய்தி எதிரொலி:  அரசு பஸ்சில் ஊர் பெயர் எழுதப்பட்டது
x
தினத்தந்தி 7 Oct 2022 12:00 AM IST (Updated: 7 Oct 2022 12:00 AM IST)
t-max-icont-min-icon

‘தினத்தந்தி’ செய்தி எதிரொலியாக அரசு பஸ்சில் ஊர் பெயர் எழுதப்பட்டது.

திருவாரூர்

'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக அரசு பஸ்சில் ஊர் பெயர் எழுதப்பட்டது.

எட்டுக்குடிக்கு பஸ் இயக்கம்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இருந்து கூத்தாநல்லூர் வழியாக எட்டுக்குடிக்கு புதிய வழித்தடத்தில் கடந்த சில மாதங்களாக அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ் இயக்கப்படும் எட்டுக்குடியில் பிரசித்திப்பெற்ற முருகன் கோவில் உள்ளது. இந்த பஸ் எந்தெந்த ஊர்களை கடந்து செல்கிறது என்று பஸ்சின் பக்கவாட்டில் எழுதப்படவில்லை.

மேலும் பஸ்சில் வேறு, வேறு ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டிருந்தன. இதனால், புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ் எந்தெந்த ஊர்களின் வழியாக எட்டுக்குடிக்கு செல்கிறது என்பது தொடர்பாக கிராம மக்கள் குழப்பம் அடைந்தனர்.

'தினத்தந்தி' செய்தி

புதிய வழித்தடம் என்பதால், மன்னார்குடியில் இருந்து, எட்டுக்குடிக்கு இயக்கப்படும் பஸ்சில், அது கடந்து செல்லும் ஊர்களை எழுத வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுதொடர்பான செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் வெளியானது. இதன் எதிரொலியாக பஸ்சில் ஊர்களின் பெயர்கள் எழுதப்பட்டன. இதற்கு உரிய நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.


Next Story