மருமகள் கொடுமையால் கருணை கொலை செய்ய வேண்டும்கலெக்டரிடம் மூதாட்டி மனு


மருமகள் கொடுமையால் கருணை கொலை செய்ய வேண்டும்கலெக்டரிடம் மூதாட்டி மனு
x

மருமகள் கொடுமையால் கருணை கொலை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு அளித்தாா்

ஈரோடு

மருமகள் கொடுமையால் கருணை கொலை செய்ய வேண்டும் என்று கலெக்டரிடம் மூதாட்டி மனு கொடுத்தார்.

கலெக்டரிடம் மனு

கொடுமுடி வேதம்பாளையம் பாப்பாங்காட்டு தோட்டம் பகுதியை சேர்ந்தவர் பெரியசாமி. இவருடைய மனைவி பாவாத்தாள் (வயது 84). இவர் ஈரோடு மாவட்ட கலெக்டர் ராஜகோபால் சுன்கராவிடம் நேற்று மனு கொடுத்தார். அந்த மனுவில் அவர் கூறி இருந்ததாவது:-

எனது கணவர் கடந்த 2011-ம் ஆண்டு இறந்துவிட்டார். எனது மகள் தனது கணவருடன் ஈரோட்டில் வசித்து வருகிறார். மகன், மருமகள் பராமரிப்பில் இருந்து வந்தேன். எனது கணவருக்கு சொந்தமான சொத்துகளை மருமகள் தான் பார்த்து கொண்டார். என் மகனுக்கும் செலவுக்கு பணம் கொடுக்காமல் வீட்டைவிட்டு வெளியேற்றி விட்டார்.

கருணை கொலை

இந்தநிலையில் மருமகளும், அவரது அண்ணன், மற்றொரு நபர் என 3 பேரும் சோ்ந்து என்னை தாக்கினர். சொத்து பத்திரத்தில் கையெழுத்து போட சொல்லி மிரட்டினர். கையெழுத்து போடவில்லை என்றால் கிணற்றில் குதிக்க சொல்லி கட்டாயப்படுத்துகின்றனர். எனவே மருமகள் கொடுமையால் உணவு கிடைக்காமல் தவிக்கிறேன். எனவே என்னை கருணை கொலை செய்துவிடுங்கள். அல்லது நான் தற்கொலை செய்து கொள்ள அனுமதிக்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் அவர் கூறி இருந்தார்.


Next Story