தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறையா...? கல்வித்துறை தீவிர ஆலோனை..!


தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறையா...? கல்வித்துறை தீவிர ஆலோனை..!
x

தீபாவளிக்கு அடுத்த நாள் பள்ளிகளுக்கு விடுமுறையா...? கல்வித்துறை தீவிர ஆலோனை..!

சென்னை:

தமிழகத்தில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறைவிடக்கோரி கோரிக்கை எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 24 திங்கள்கிழமையன்று வருகிறது. தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைகளை மக்கள் தங்கள் சொந்த ஊருக்குச் சென்று கொண்டாடுவது வழக்கம்.

சனி, ஞாயிறு, திங்கள் என மூன்று நாட்கள் தொடர் விடுமுறையாக வருவதால், இந்தாண்டு சொந்த ஊருக்குச் செல்லும், பொது மக்களின் எண்ணிக்கை மிகவும் கூடுதலாக இருந்தது. நேற்று ஒரே நாளில் 3,300 அரசு பேருந்துகளில் 1.65 லட்சம் பேர் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குப் பயணித்தனர்.

தீபாவளியை ஒட்டி சொந்த ஊர் செல்வதற்காக, 1.66 லட்சம் பேர் சிறப்பு பேருந்துகளில் முன்பதிவு செய்துள்ளதாக போக்குவரத்துத்துறை தகவல் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் தீபாவளிக்கு அடுத்த நாளான செவ்வாய்க் கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டு, இருப்பதால், தீபாவளி அன்றிரவே பொது மக்கள் சென்னை திரும்ப வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டியதும் அவசியமாக உள்ளது. எனவே, பள்ளிகளுக்கு விடுமுறை விடப் பெற்றோரும் மாணவர்களும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதேபோல திருப்தியுடன் தீபாவளியைக் கொண்டாடும் வகையில், 25ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில், தமிழ்நாட்டில் தீபாவளிக்கு மறுநாள் செவ்வாய்க்கிழமை (அக்டோபர் 25ஆம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து முதல்-அமைச்சருடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.


Next Story