கல்லூரி மாணவி இறப்பை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்


கல்லூரி மாணவி இறப்பை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும்
x

கல்லூரி மாணவி இறப்பை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்று கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுக்கப்பட்டது

திருச்சி


திருச்சிைை அடுத்த திருவெறும்பூர் பகுதியை சேர்ந்தவர் சாந்தி. இவர் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:- எனது 3-வது மகள் வித்யாலட்சுமி திருச்சியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 3-ம் ஆண்டு படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 12-ந்தேதி பெல் குடியிருப்பு பகுதியில், 3 வாலிபர்கள் சேர்ந்து எனது மகளிடம் தகராறு செய்து அவரது வாயில் வலுக்கட்டாயமாக குளிர்பானத்தில் விஷத்தை கலந்து ஊற்றினர். இதில் அவர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். பின்னர் எனது மகளின் உடல் பிரேத பரிசோதனைக்கு பின் குற்றவாளிகளை கைது செய்தால்தான் உடலை வாங்குவோம் என்று எனது குடும்பத்தாரும், உறவினர்களும் போராட்டம் நடத்தினர். அப்போது போலீசார் 3 குற்றவாளிகளையும் கைது செய்து விட்டதாகவும், அவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும் நிவாரணத் தொகை வழங்குவதாக வாக்குறுதி கொடுத்தனர். ஆனால் எனது மகளை தற்கொலைக்கு தூண்டியதாக சாதாரணமான வழக்கினை பதிவு செய்து இருக்கிறார்கள். உண்மை நிலையை ஆராய்ந்து எனது மகளின் வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து சம்பந்தப்பட்டவர்களை கைது செய்து வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. அப்போது தேவேந்திரகுல வேளாளர் பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஐயப்பன், பொதுச் செயலாளர் சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story