சமயநல்லூர் அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்த விவசாயி சாவு - கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை


சமயநல்லூர் அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்த விவசாயி சாவு - கொலை வழக்காக மாற்றி போலீஸ் விசாரணை
x

சமயநல்லூர் அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்த விவசாயி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மதுரை

வாடிப்பட்டி

சமயநல்லூர் அருகே அரிவாள் வெட்டில் காயம் அடைந்த விவசாயி உயிரிழந்தார். இதனால் கொலை வழக்காக மாற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

அரிவாள் வெட்டு

சமயநல்லூர் கட்டபுலி நகர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் முருகன் என்ற சுப்பிரமணி (வயது 47) விவசாயி. சொந்தமாக டிராக்டர் வைத்து தொழில் செய்து வந்தார். இவரது மனைவி வீட்டில் ஆடுகள் வளர்த்து வந்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 23-ந்தேதி வீட்டிலிருந்த 2 ஆடுகள் திருடுபோனது. 4 நாட்கள் கழித்து அந்த ஆடுகள் கண்டுபிடிக்கப்பட்டது. இது சம்பந்தமாக அதே ஊரை சேர்ந்த கபிலேஷ் திருடியதாக கூறப்பட்ட நிலையில் ஊர் பெரியவர்களை வைத்து சமரசமாக பேசப்பட்டது. இந்த சம்பவத்தை மனதில் வைத்து அடிக்கடி சுப்பிரமணியை, கபிலேஷ் மிரட்டி வந்தார்.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் 6-ந் தேதி இரவு 10.10 மணிக்கு வீட்டின் முன்பாக சுப்பிரமணி நின்று கொண்டிருந்தபோது அங்கு வந்த கபிலேஷ் என்னை ஆடு திருடியதாக சொல்லி அசிங்கப்படுத்தி வருகிறாயா என்று ஆபாசமான வார்த்தைகளால் பேசி தான் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சுப்பிரமணியை வெட்டினார். அவருடன் இருந்த ஆட்டோ ராஜா என்பவரும் சேர்ந்து சுப்பிரமணியை கத்தியால் குத்தினார். இதில் படுகாயம் அடைந்த சுப்பிரமணி மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

கொலை வழக்கு

இதுகுறித்து சமயநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கபிலேஷ், ஆட்டோ ராஜா ஆகியோரை கைது செய்தனர். இதற்கிடையே காயம் அடைந்த சுப்பிரமணி கடந்த ஏப்ரல் மாதம் 24-ந் தேதி டிஸ்சார்ஜ் ஆகி வீட்டில் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் கட்டப்புலிநகர் அருகே அவர் திடீரென்று மயங்கி விழுந்தார். அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி சமயநல்லூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story