மயங்கி விழுந்த முதியவர் சாவு


மயங்கி விழுந்த முதியவர் சாவு
x

மயங்கி விழுந்த முதியவர் உயிரிழந்தார்.

அரியலூர்

ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள இலையூர் கண்டியங்கொல்லை கிராமத்தைச் சேர்ந்தவர் வீராசாமி(வயது 70). இவர் தனது ஊரிலிருந்து ஜெயங்கொண்டம் வாரச்சந்தைக்கு காய்கறி வாங்க வந்துவிட்டு, மளிகை பொருட்கள் 4 ரோட்டில் இருந்து சிதம்பரம் ரோட்டில் உள்ள கடைக்கு சென்றார். அப்போது திடீரென மயங்கி கீழே விழுந்த அவர், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர்.


Related Tags :
Next Story