பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு
போத்தனூர்
கோவை செல்வபுரம் தில்லைநகர் பகுதியை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் விஷ்ணு (வயது18). இவர் தனது நண்பர்களான கோவை இடையர் வீதியை சேர்ந்த விக்னேஷ், மற்றும் சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த சதீஸ்வரன் ஆகியோருடன் இருசக்கர வானத்தில் கல்லூரிக்கு சென்றார்.
கோவை குறிச்சி குளம் அருகே வந்த போது, எதிரே பாரம் ஏற்றி வந்த டிப்பர் லாரி, 3 பேரும் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் சைடு இன்டிகேட்டரில் மோதியதாக தெரிகிறது. இதில் நிலைதடுமாறி இரு சக்கர வாகனம் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர மரத்தில் மோதியது.
இதில் படுகாயடைந்த விஷ்ணு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் காயமடைந்த சதீஸ்வரன், விக்னேஷ் ஆகியோர் கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் விக்னேஷ் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் உயிரிழந்தார். இதனால் பலி எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.