வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுபகுதி வலுவடைந்தது..! தமிழகத்தில் நாளை முதல் கனமழைக்கு வாய்ப்பு - இந்திய வானிலை மையம்
தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை ,
வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் மீண்டும் தீவிரம் அடைய இருக்கிறது. ஏற்கனவே இம்மாதம் முதல் வாரத்தில் மழை வெளுத்து வாங்கிய நிலையில், அதன் பின்னர் சிறிய இடைவெளி கொடுத்தது. மீண்டும் கடந்த 10-ந்தேதியில் இருந்து மாநிலம் முழுவதும் பரவலாக மழை கொட்டியது. இதனால் பல இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்தது. அதன் தொடர்ச்சியாக கடந்த 3 நாட்களாக தமிழகத்தில் மழை சற்று குறைந்து இருந்தாலும், தென் மாவட்டங்களில் மட்டும் சில இடங்களில் கன மழையும், மற்ற பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்து வருகிறது.
இந்த நிலையில் தென்கிழக்கு வங்கக்கடலில் ஏற்கனவே உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவுத்துள்ளது.
இதனால் தமிழகத்தில் நாளை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.