சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு துணை சூப்பிரண்டு பாராட்டு
இலுப்பூரில் சிறப்பாக பணியாற்றிய போலீசாருக்கு துணை சூப்பிரண்டு பாராட்டு தெரிவித்தார்.
புதுக்கோட்டை
இலுப்பூரில் கவாத்து பயிற்சி நேற்று நடந்தது. இதில் இலுப்பூர் போலீஸ் துணை சூப்பிரண்டு காயத்திரி கலந்துகொண்டார். பின்னர் கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிறப்பாக பணியாற்றி குற்றவாளிகளை கைது செய்த போலீசார் ராஜாத்தி, கோகுல், நாகூர்மீரான் உள்ளிட்ட போலீசாருக்கும், போலீஸ் நிலையத்தில் சிறப்பாக பணியாற்றி வரும் போலீசாரை பாராட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகளை வழங்கினார். இதில் இன்ஸ்பெக்டர்கள் சந்திரசேகரன் மற்றும் விராலிமலை, இலுப்பூர் இன்ஸ்பெக்டர்கள், சப்- இன்ஸ்பெக்டர்கள், போலீசார் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story