பால்குடம் எடுக்க வந்த பக்தர்கள் அதிர்ச்சி


பால்குடம் எடுக்க வந்த பக்தர்கள் அதிர்ச்சி
x

பால்குடம் எடுக்க வந்த பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

புதுக்கோட்டை

அன்னவாசல் அருகே புதூர் ஊரணி கரையில் விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் இருந்து வயலோகம் முத்துமாரியம்மன் கோவிலுக்கு புதூரை சேர்ந்த ஒருதரப்பினர் விரதம் இருந்து அலகுகுத்தி, பால்குடம் எடுத்து செல்வது வழக்கம். இந்தநிலையில் விநாயகர் கோவிலில் இருந்து பால்குடம் எடுக்கும் பக்தர்கள், கோவிலுக்கு வந்து நாங்கள் விரதம் இருந்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு பால்குடம் எடுக்க உள்ளோம். இதனால் விநாயகர் கோவில் நடையை திறந்து வையுங்கள் என்று கோவில் பூசாரியிடம் கூறியுள்ளனர். ஆனால் பூசாரி கோவில் சாவி என்னிடம் இல்லை மற்றொரு தரப்பினரிடம் உள்ளது என்று கூறினார். இதனையடுத்து நேற்று கோவில் நடை சாத்தப்பட்டிருந்த அதிர்ச்சியில் கோவில் வாசலில் வைத்து பக்தர்கள் அலகுகுத்தி, பால்குடம் எடுத்து முத்துமாரியம்மன் கோவிலுக்கு சென்றனர்.


Next Story