வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு


வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி ஆய்வு
x
தினத்தந்தி 26 Nov 2022 6:45 PM GMT (Updated: 26 Nov 2022 6:45 PM GMT)

சின்னசேலத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கும் முகாமை மாவட்ட வருவாய் அதிகாரி சத்தியநாராயணன் ஆய்வு மேற்கொண்டார்.

கள்ளக்குறிச்சி

சின்னசேலம்,

சின்னசேலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்குதல், திருத்தம் செய்வது தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. இந்த மையத்தை மாவட்ட வருவாய் அதிகாரி சத்தியநாராயணன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் அங்கிருந்த வாக்குச்சாவடி அலுவலர்கள் சேகர், ஞானப்பிரகாசம் ஆகியோரிடம் பெறப்பட்டுள்ள விண்ணப்பங்கள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார். மேலும் தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களையும் விடுபடாமல் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து அங்கிருந்த அதிகாரிகளிடம், சின்னசேலம் பேரூராட்சி பகுதியில் வாக்காளர் பட்டியலில் ஆதார் எண் இணைக்கும் பணி முழுமை பெறாமல் உள்ளது. எனவே அதனை கள ஆய்வு செய்து ஆதார் எண்களை இணைக்கும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என உத்தரவிட்டார். இந்த ஆய்வின்போது சின்னசேலம் தாசில்தார் இந்திரா, குடிமை பொருள் தனி தாசில்தார் கமலம், மாவட்ட வருவாய் அலுவலரின் நேர்முக உதவியாளர் மணி, தேர்தல் துணை தாசில்தார் குணசேகரன், வருவாய் ஆய்வாளர் உமாமகேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் தர்மராஜ் மற்றும் அரசியல் கட்சியை சேர்ந்த வாக்குச்சாவடி முகவர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.


Next Story