நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே 'இரட்டை ரெயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவுபெறும்' -கோட்ட மேலாளர் முகுந்த் தகவல்


நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே  இரட்டை ரெயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவுபெறும்  -கோட்ட மேலாளர் முகுந்த் தகவல்
x

நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் தெரிவித்தார்

திருநெல்வேலி

வள்ளியூர்:

நாகர்கோவில்-மேலப்பாளையம் இடையே இரட்டை ரெயில் பாதை பணிகள் அடுத்த ஆண்டுக்குள் நிறைவு பெறும் என்று திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் தெரிவித்தார்.

இரட்டை ரெயில்பாதை

திருவனந்தபுரம் ெரயில்வே கோட்டம் சார்பில் நாகர்கோவில்- மேலப்பாளையம் வரை மின்மயமாக்கலுடன் புதிய இரட்டை ெரயில் பாதை அமைக்கும் பணிகள் 4 கட்டங்களாக நடக்கிறது. தற்போது வள்ளியூரில் இருந்து நாங்குநேரி வரை மின்மயமாக்களுடன் கூடிய இரட்டை ெரயில் பாதை பணிகள் நிறைவடைந்துள்ளது.

இதையடுத்து இந்த ரெயில் பாதையில் ெரயில்வே தென்சரக பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய் நேற்று டிராலியில் அதிகாரிகளுடன் சென்று ஆய்வு செய்தார்.

தொடர்ந்து மாலை 3 மணி அளவில் நாங்குநேரியில் இருந்து வள்ளியூர் வரை அதிவேகமாக ெரயிலை இயக்கி சோதனை ஓட்டம் நடந்தது. இந்த ெரயிலில் தென்சரக ெரயில்வே பாதுகாப்பு ஆணையர் அபய்குமார் ராய், திருவனந்தபுரம் ரெயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் மற்றும் அதிகாரிகள் பயணம் செய்தனர்.

ரெயில் இயக்க நடவடிக்கை

பின்னர் ெரயில்வே கோட்ட மேலாளர் முகுந்த் வள்ளியூரில் நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்குநேரி- வள்ளியூர் இடையே அமைக்கப்பட்ட புதிய ெரயில் பாதையில் 120 கிலோ மீட்டர் வேகத்தில் ெரயிலை இயக்கி சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஒரு சில இடங்களில் சிறு, சிறு குறைகள் தென்பட்டது. அதனை நிவர்த்தி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நேற்று டீசல் என்ஜின் ெரயில் மூலம் சோதனை செய்யப்பட்டது.

நாகர்கோவில்- மேலப்பாளையம் இடையே நான்கு கட்டப்பணிகளில் 2 கட்டப்பணிகள் நிறைவு பெற்று சோதனை ஓட்டம் நடந்துள்ளது. நாகர்கோவில்- மேலப்பாளையம் இடையே அடுத்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைந்து, இரட்டை ெரயில் பாதை போக்குவரத்து தொடங்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story