பெரிய ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது
பெரிய ஏரியை தூர்வாரும் பணி தொடங்கியது.
அரியலூர்
அரியலூர் மாவட்டம், தாமரைக்குளம் ஊராட்சியில் நான்கு ஏரிகள் உள்ளன. அனைத்து ஏரிகளும் நீரில்லாமல் வறண்டு போய் விளையாட்டு மைதானம் போல் காட்சியளித்தது. இதனால் பள்ளி மாணவகள் ஏரிப்பகுதியில் கிரிக்கெட் விளையாடி வந்தனர். இந்நிலையில் பெரிய ஏரியை தூர் வாருவது என்று கிராம ஊராட்சியில் நடந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஆதாரத்தை டால்மியா சிமெண்டு நிறுவனத்திடம் கேட்டிருந்தனர். இதையடுத்து ரூ.3.5 லட்சம் மதிப்பில் ஏரியை தூர்வாரி தருவதாக அந்த நிறுவனம் உறுதி அளித்தது. அதன்படி பொக்லைன் எந்திரங்கள் மற்றும் வாகனங்களை வழங்கி, ஏரியை தூர்வாரும் பணியை தொடங்கியது. வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு ஏரியை தூர்வாரும் பணியை முடித்தால், ஏரியில் வழக்கமான அளவைவிட அதிக நீரை தேக்கி வைக்கலாம் என்று கிராம மக்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story