அரசு பஸ் கண்ணாடியை உடைத்த மனநலம் பாதிக்கப்பட்டவரை கட்டிவைத்த டிரைவர், கண்டக்டர்...!
மாங்காடு அருகே அரசு பஸ்சின் கண்ணாடியை கல்லை தூக்கி எறிந்து மனநலம் பாதிக்கப்பட்டவரை உடைத்துள்ளார்.
காஞ்சிபுரம்,
காஞ்சிபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த பட்டூர் பஸ் நிலையத்தில் பிராட்வே செல்லும் அரசு பஸ் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அந்த வழியாக நடந்து சென்ற மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவர், அந்த பஸ்சில் கல்லை தூக்கி எறிந்ததில் முன்பக்க கண்ணாடி முழுவதும் உடைந்து சேதம் அடைந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த பயணிகள் பஸ்சில் இருந்து அலறியடித்தபடி வெளியே ஓட்டம் பிடித்தனர்.
இதனை அடுத்து பஸ் கண்ணாடியை உடைத்து விட்டு சர்வ சாதாரணமாக நடந்து சென்ற அவரை அங்கிருந்து அரசு பஸ் டிரைவர்களும், கண்டக்டர்களும் சேர்ந்து மடக்கி பிடித்து சாலையில் தர, தரவென இழுத்து சென்று கயிறால் கட்டி வைத்து தாக்கியதாக கூறப்படுகின்றது.
பின்னர், சம்பவம் குறித்து மாங்காடு போலீஸ் நிலையத்தில் அரசு பஸ் கண்டக்டர்கள் புகார் அளித்தனர். இதுகுறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.
Related Tags :
Next Story