ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் மயக்கம்


ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் மயக்கம்
x

நாட்டறம்பள்ளி அருகே ஓடும் பஸ்சில் டிரைவருக்கு திடீர் மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் பயணிகள் தப்பினர்.

திருப்பத்தூர்

திடீர் மயக்கம்

வேலூரில் இருந்து சுமார் 60-க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு கர்நாடக மாநிலம் பெங்களூருவை நோக்கி அரசு பஸ் புறப்பட்டு சென்றது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த டிரைவர் பழனி பஸ்சை ஓட்டினார். கண்டக்டர் குமார் பணியில் இருந்தார்.

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளியை அடுத்த பங்களாமேடு பகுதி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது டிரைவர் பழனிக்கு திடீரென மயக்கம் ஏற்பட்டுள்ளது. இதனால் சுதாரித்துக்கொண்ட அவர் சாலையின் ஓரமாக பஸ்சை நிறுத்தியுள்ளார். அதை தொடர்ந்து மயக்கமடைந்தார்.

பயணிகள் தப்பினர்

உடனடியாக டிரைவர் பழனியை நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் மாற்று டிரைவர் ஏற்பாடு செய்யப்பட்டு பஸ் இயக்கப்பட்டது.

மயக்கம் ஏற்பட்டதும் உடனடியாக பஸ்சை நிறுத்தியதால் 60 பயணிகள் எந்தவித பாதிப்பும் இல்லாமல் தப்பினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Related Tags :
Next Story